ஆர்.எஸ்.மங்கலம் ; இளையான்குடி ரெகுநாதமடை ரோடு செப்பனிட ஜல்லிகள் கொட்டப்பட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரெகுநாதமடை கிராமத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் இருந்து, ரெகுநாதமடை கிராமத்திற்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.இந்த ரோடு குண்டும் குழியுமாக மாறியதை தொடர்ந்து, புதிதாக தார் ரோடு அமைப்பதற்காக கடந்த 6 மாதத்திற்கு மேலாக ரோட்டோரத்தில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன.
ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் ரோடு அமைக்கும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கிராமத்தினர் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து ரோட்டை செப்பனிட நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE