ராமநாதபுரம் : ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம் பூட்டி கிடந்ததால் உதவி தொகை பெற விண்ணப்பிக்க வந்த முதியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்பலர் தினசரி வந்துசெல்கின்றனர்.தேர்தல் காரணமாக கடந்த ஒருமாதமாக பயனாளிகள் யாரும் வரவில்லை. தேர்தல் முடிந்துஉள்ளதால் நேற்று வழக்கம்போல முதியவர்கள் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்தது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இதுகுறித்து முதியவர்கள் முத்துமாரி, ராக்காம்மாள் கூறுகையில், 'கடந்த 5 மாதங்களாக உதவிதொகை வரவில்லை, இதுதொடர்பாக தேர்தல் முடிந்த பின் 8ம் தேதி வரக்கூறினர். காலை 9:00மணிக்கே வந்துவிட்டேன் அலுவலகம் பூட்டியுள்ளது,' என்றார்.
தாசில்தார் ரவிச்சந்திரன் கூறுகையில், ''அலுவலர்கள் தேர்தல் பணிக்கு சென்றுஉள்ளனர். அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுப்படும், '' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE