ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் கடந்த சில மாதமாக குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளதாக சைல்டு லைன் அமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் பகுதியில் குடும்ப வருமானத்திற்காக சிறுவர், சிறுமிகளை தங்களுடன் வேலைக்கு அழைத்து செல்கின்றனர். சில இடங்களில் 18 வயது ஆகாத மைனர் பெண்களுக்கு திருமணம் நடக்கிறது. மேலும் பெண்குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.
இதுதொடர்பாக 1098 சைல்டு லைன் அமைப்பிற்கு புகார்கள் குவிகின்றன. இதன்பேரில் கடந்த ஆண்டு மாதந்தோறும் 10திருமணங்கள் வரை 1098 சைல்டு லைன் அமைப்பினர் போலீசார், சமூகநலத்துறை அதிகாரிகள் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சைல்டு லைன் இயக்குனர் கருப்பசாமி கூறுகையில், 'கடந்த பிப்ரவரி, மார்ச்சில் இரு திருமணங்கள் தடுத்து நிறுத்தபட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் மாவட்டத்தில் குறைந்துஉள்ளது. முற்றிலும் குழந்தை திருமணங்களை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளோம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE