இன்னும் 7 நாட்கள்: தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்னும் 7 நாட்கள்: தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க தடை

Added : ஏப் 09, 2021
Share
ராமேஸ்வரம் : இன்னும் 7 நாளில் தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல 60 நாட்கள் தடை காலம் துவங்க உள்ளது.கோடையில் மீன் இனப்பெருக்கம், கடல் வளத்தை பாதுகாத்திட ஏப்., 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்தாண்டு தடை காலம் துவங்க இன்னும் 7 நாட்கள் உள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை

ராமேஸ்வரம் : இன்னும் 7 நாளில் தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல 60 நாட்கள் தடை காலம் துவங்க உள்ளது.

கோடையில் மீன் இனப்பெருக்கம், கடல் வளத்தை பாதுகாத்திட ஏப்., 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்தாண்டு தடை காலம் துவங்க இன்னும் 7 நாட்கள் உள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரம் மேலான விசைப்படகு மீனவர்கள் ஏப். 15 முதல் மீன்பிடிக்க தடை செல்ல விதிக்கப்படுகிறது.

இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்னும் 7 நாளில் மூன்று முறை மீன்பிடிக்க சென்ற பின், தடை காலத்தை எதிர்நோக்கி வலைகள், மின் பேட்டரிகள், மீன்பிடி தளவாட பொருள்களை படகில் இருந்து கீழே இறக்கிட ஆயத்தமாகி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X