தமிழ்நாடு

கொரோனா தடுப்பு வீதிமீறல்; ரூ.6.97 லட்சம் அபராதம் வசூல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், தனிநபர்களிடம் மார்ச் முதல் தற்போது வரை ரூ.6லட்சத்து 97 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புஅரசு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:பொது

ராமநாதபுரம் : மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், தனிநபர்களிடம் மார்ச் முதல் தற்போது வரை ரூ.6லட்சத்து 97 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புஅரசு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:பொது சுகாதாரத்துறை மூலமாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், 33 மினி கிளினிக்கள் என 101 இடங்களில் கொரோனா தடுப்பூசி 35,874 நபர்களுக்கு போடப்பட்டுஉள்ளது.

முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய தொற்றுநோய் தடுப்புவிதிகளை மீறும்தனிநபர், நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மார்ச் முதல் இதுவரைரூ.6 லட்சத்து 97 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் பொற்கொடி, இந்திரா, ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X