பொது செய்தி

தமிழ்நாடு

குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் பாம்பலூரணி நீரோடையில் பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த குதிரை வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த கற்சிற்பத்தில் உள்ள வீரன் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரையின் மீது அமர்ந்து ஈட்டியை கையில் ஏந்தியவாறு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தது போல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூந்தலை அள்ளி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் பாம்பலூரணி நீரோடையில் பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த குதிரை வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கற்சிற்பத்தில் உள்ள வீரன் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரையின் மீது அமர்ந்து ஈட்டியை கையில் ஏந்தியவாறு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தது போல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூந்தலை அள்ளி முடிந்து தலைக்கு மேலே கொண்டையாகவும், இரு புஜங்களில் தோல் வளையமும், கைகளில் காப்பு, கழுத்தில் சிறிய மாலையும் முழங்கால் வரை அணிந்தவாறு சூரிய உதயத்தை எதிர்நோக்கும் வகையில் கிழக்கே அமைந்துள்ளது.

அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது அமர்ந்து இருப்பதால் போரில் வீர மரணமடைந்த வீரனாக இருக்கலாம் என அறிய முடிகிறது. இந்த நடுகல்லுக்கு சிவராத்திரியன்று மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர் என அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் விஜயராகவன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X