முன்னாள் அமைச்சர் தேஷ்முக் மனு தள்ளுபடி

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மஹாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அனில் தேஷ்முக் சார்பிலும், மஹாராஷ்டிரா அரசு சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நீதிபதி, எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு
 தேஷ்முக் ,மனு தள்ளுபடி

மஹாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அனில் தேஷ்முக் சார்பிலும், மஹாராஷ்டிரா அரசு சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நீதிபதி, எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது: இந்த விவகாரத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அதுவும், உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், மூத்த அமைச்சர் மீது கூறியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.


latest tamil news



இந்த நிலையில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மஹாராஷ்டிர அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது அரசியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்
பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
09-ஏப்-202110:31:49 IST Report Abuse
sankaseshan ஊழல் செய்து மக்கள் பணத்தை ஆட்டையை போடுவதில் நம்மவூரு கட்டுமரத்துக்கு தாத்தா பவார் .
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
09-ஏப்-202108:08:23 IST Report Abuse
shyamnats செய்தி தொகுப்பில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன என்று குறிப்பிடப்படவில்லையே?
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
09-ஏப்-202112:00:41 IST Report Abuse
கல்யாணராமன் சு.குற்றச்சாட்டு: அனில் தேஷ்முக் மும்பை restaurant மற்றும் pubs போன்ற இடங்களிலிருந்து மாதம் 100 கோடி ரூபாய் மாமூலாக வசூலித்து தருமாறு போலீஸ் அதிகாரிகளை வற்புறுத்தியதாக, முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பிர் சிங் புகார் அளித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல், இந்த விஷயத்தை உத்தவ் தாக்கரே, மற்றும் சரத் பவார் இடம் கொண்டு சென்றதாகவும், அவர்களுக்கு அது ஏற்கனவே தெரியும் என்பதை தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்....
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
09-ஏப்-202108:02:22 IST Report Abuse
Balasubramanian Ramanathan அடுத்து உச்சநீதிமன்றம் செய்தது தவறு என 250 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், திரைப்பட பிரபலங்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், ஓய்வு பெற்ற அரசுஉயர் அதிகாரிகள், எல்லாம் பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதுவார்கள். தமிழக காட்சி ஊடகங்களில் கண்டண விவாதம் நடைபெறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X