பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வு, ஆலோசனை நடத்த வீட்டு வசதித்துறை விறுவிறு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், துறை ரீதியான ஆய்வு, ஆலோசனை கூட்டங்கள் நடத்த, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தீர்மானித்துள்ளது.தமிழகத்தில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்., 26ல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பொதுவாக ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்த சில நாட்களில், முடிவுகள் வெளியாவது

சென்னை:தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், துறை ரீதியான ஆய்வு, ஆலோசனை கூட்டங்கள் நடத்த, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தீர்மானித்துள்ளது.

தமிழகத்தில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்., 26ல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பொதுவாக ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்த சில நாட்களில், முடிவுகள் வெளியாவது வழக்கம். ஆனால் இம்முறை, ஏப்., 6ல் ஓட்டுப்பதிவு முடிந்தாலும், மே, 2 வரை முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். அதன் பிறகே, வழக்கமான நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில், ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், நிலுவை கோப்புகளை முடிப்பது தொடர்பான ஆலோசனை, ஆய்வு கூட்டங்களை நடத்த, அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் உள்ள, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., ஆகியவற்றில், புதிய கட்டுமான திட்டங்கள், நில வகைப்பாடு மாற்ற கோப்புகளை, தொழில்நுட்ப கமிட்டி ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும், நில வகைப்பாடு தொடர்பாக மக்கள் கருத்து பெறும் பணிகளை மேற்கொள்ளவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, தலைமை செயலர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் ஆலோசனை பெறவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அடுத்த சில நாட்களில், இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும், இயல்பான பணிகள் தொடர்பாக அரசாணைகள் பிறப்பிக்கவும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X