சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் /////

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மிளகாய் பொடி துாவி நகை பறிப்புசாத்துார்: ஜெகன் வீரபட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி உஷாதேவி 25, நேற்று காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து டூவீலரில் சென்ற மர்ம நபர் இருவர் உஷாதேவி மீது மிளாகாய் பொடி தூவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். உஷாதேவி சங்கிலியை பிடித்துக் கொண்டார். இதனால் சங்கிலி

மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு

சாத்துார்: ஜெகன் வீரபட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி உஷாதேவி 25, நேற்று காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து டூவீலரில் சென்ற மர்ம நபர் இருவர் உஷாதேவி மீது மிளாகாய் பொடி தூவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். உஷாதேவி சங்கிலியை பிடித்துக் கொண்டார். இதனால் சங்கிலி அறுந்து அரை பவுன் நகையை மட்டும் திருடர்கள் பறித்து தப்பினர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

டூ வீலர்கள் மோதல் எஸ்.ஐ., காயம்

காரியாபட்டி: நரிக்குடி ஸ்டேஷன் எஸ்.ஐ., சுப்புலட்சுமி 40, நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு ஹெல்மெட் அணிந்து டூவீலரில் காரியாபட்டிக்கு சென்றார். ராபதியேந்தல் ஓடு பாலம் அருகே வந்த போது எதிரில் டூவீலரில் வந்த இருவர் ( ஹெல்மெட் அணியவில்லை) மோதியதில் சுப்புலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது. எஸ்.ஐ.,யை காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பிய நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

எஸ்.ஐ.,க்கு பிடிவாரண்ட்

சிவகாசி: திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., யாக பணியாற்றியவர் காளிமுத்து. திருட்டு வழக்கில் சாட்சி கூறாமல் காளிமுத்து தாமதித்து வந்தார். இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சிவகாசி நீதித்துறை இரண்டாவது நடுவர் உத்தரவிட்டார்.

மது பாட்டில்கள் பறிமுதல்

சிவகாசி: திருத்தங்கல்லில் மது பாட்டில் விற்பனை செய்த சுக்கிரவார்பட்டி ரோடு லிங்கராஜ் 46, மாரீஸ்வரனை 26, போலீசார் கைது செய்தனர். 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X