அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தடுப்பூசி ஏற்றுமதியை ஏற்க முடியாது'

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை:'இந்திய மக்கள் அனைவருக்கும், தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை, எந்த வகையிலும் ஏற்க முடியாது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அவரது அறிக்கை: கொரோனா தொற்றில் இருந்து, மக்களை பாதுகாக்கும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது. அந்த வகையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி, கொரோனா
 'தடுப்பூசி ஏற்றுமதியை ஏற்க முடியாது'

சென்னை:'இந்திய மக்கள் அனைவருக்கும், தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை, எந்த வகையிலும் ஏற்க முடியாது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: கொரோனா தொற்றில் இருந்து, மக்களை பாதுகாக்கும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது. அந்த வகையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி, கொரோனா தடுப்பூசியை உடனே போட வேண்டும். ஆனால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், 'யாருக்கு தடுப்பூசி அவசியமோ; அவர்களுக்கு மட்டும் தான் போடப்படும்' என, கூறியிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் வாயிலாக, கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும். இதை, மத்திய அரசு உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து, அனைத்து மக்களுக்கும், கொரோனா தடுப்பூசி போட வேண்டுமே தவிர, தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மத்திய அரசு இதுவரை, ஆறு கோடி தடுப்பூசி களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பது, மிகுந்த வேதனை தருகிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை, எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த மக்கள் விரோத நடவடிக்கையை, வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
09-ஏப்-202123:29:53 IST Report Abuse
unmaitamil முதலில் நீயும், பப்புவும் தடுப்பூசி போட்டியா ??? அதை முதலில் செய். தடுப்பூசி தட்டுப்பாடு இல்லையே . பின் ஏன் கவலை ??
Rate this:
Cancel
gopalasamy N - CHENNAI,இந்தியா
09-ஏப்-202121:14:18 IST Report Abuse
gopalasamy N முதலில் காங் கட்சியினருக்கு போடா வேண்டும் முதலில் இதை எதிர் விட்டு இப்பொது இப்படி பேச்சு காங் நாட்டுக்குகேடு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஏப்-202116:21:56 IST Report Abuse
J.V. Iyer ஏற்காவிட்டால் பாகிஸ்தானில் தஞ்சம் அடையலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X