பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமான பணி மீண்டும் துவக்க பெற்றோர் வலியுறுத்தல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
விருதுநகர் : தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதால் முடக்கப்பட்டிருந்த விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணியை மீண்டும் துவக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.44 ஏக்கர் பரப்பளவில் ரூ. 170 கோடி மதிப்பில் அமையவுள்ள அரசு மருத்துவ கல்லுாரி, நிர்வாக அலுவலகம், டீன் குடியிருப்பு, மாணவ, மாணவியர் விடுதி, தலைமை

விருதுநகர் : தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதால் முடக்கப்பட்டிருந்த விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணியை மீண்டும் துவக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.44 ஏக்கர் பரப்பளவில் ரூ. 170 கோடி மதிப்பில் அமையவுள்ள அரசு மருத்துவ கல்லுாரி, நிர்வாக அலுவலகம், டீன் குடியிருப்பு, மாணவ, மாணவியர் விடுதி, தலைமை அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் முடித்து திறப்பு விழா காண ஏற்பாடுகளை செய்யும்படி பொதுப்பணித்துறைக்கு (மருத்துவம்) முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து கட்டுமான பணிகள் துரிதமாக நடந்தது. கட்டடத்தின் முகப்பு பகுதிகளில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டன. நர்சரி கார்டன் அமைக்க தேவையான பூக்கள் ஊட்டி, கொடைக்கானில் இருந்து வரவழைக்கப்பட்டன. மார்ச் முதல் வாரத்தில் மருத்துவ கல்லுாரி திறப்பு விழா, அதனருகே ரூ.80 கோடி மதிப்பில் மாநிலத்தின் இரண்டாவது அரசு பல் மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்தன.

எனினும் அதற்கு முன்பாகவே பிப்.,26 ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானது. இதனால் கட்டுமான பணி முற்றிலும் முடங்கியது. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதால் கட்டுமானப்பணியை மீண்டும் துவக்க வேண்டும். இதன் மூலம் ஆகஸ்ட்டில் 150 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளுக்கான அட்மிஷன் நடை பெற வசதியாக இருக்கும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X