அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு அ.தி.மு.க., 'வீடியோ' வெளியீடு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 6ல் நிறைவடைந்தது. ஒரு மாதமாக, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், கூட்டணி கட்சிகளின், ஐ.டி., பிரிவுகளுடன் இணைந்து, தேர்தல் பிரசார வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.எதிர்க்கட்சிகளுக்கு எதிரான வீடியோக்களையும், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கும் வீடியோக்களையும், அதிக அளவில் பகிர்ந்தனர். எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டுகளுக்கு,

சென்னை:தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 6ல் நிறைவடைந்தது. ஒரு மாதமாக, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், கூட்டணி கட்சிகளின், ஐ.டி., பிரிவுகளுடன் இணைந்து, தேர்தல் பிரசார வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

எதிர்க்கட்சிகளுக்கு எதிரான வீடியோக்களையும், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கும் வீடியோக்களையும், அதிக அளவில் பகிர்ந்தனர். எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டுகளுக்கு, உடனுக்குடன் குறும்படம், 'மீம்ஸ்' வழியாக கலக்கினர். தேர்தல் நிறைவடைந்த நிலையில், கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை, அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவினர் துவக்கி உள்ளனர்.

அவர்கள் , நடிகர் ரஜினி பேசுவது போல, 'கார்ட்டூன் வீடியோ' ஒன்றை தயாரித்துஉள்ளனர். அதில், 'சாதாரண காய்ச்சல் மாதிரி, ஜலதோஷம் மாதிரி, வந்தா நாலு நாளில், இதோ போயிடுறேன் எஜமான்னு பயந்து, கும்பிடு போட்டு, ஓடிரும்னு நினைச்சாயடா; கொரோனாடா... கண்ணா நாம் மாஸ்க் போடலைன்னா, கொரோனா நம்மளையே போட்டுரும். ஜாக்கிரதை' என, நடிகர் ரஜினி தன் பாணியில் பேசுவது போன்ற காட்சி இடம் பெற்றுஉள்ளது. இது, சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X