வடமதுரை : 'எலிகளை ஒழிக்க தற்போதைய காலம் சிறந்தது' என, வேளாண் அலுவலர் சுப்பையா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: நீர் இருப்பின்றி சாகுபடியற்ற நிலங்களில் சில முன்னெச்சரிக்கை பணிகள் செய்ய இது தகுந்த நேரம்.விவசாயத்தில் அதிக இழப்பு தருவதில் எலிகள் முக்கியானவை. எலிகள் 50 முதல் 100 கிராம் தானியத்தை உண்ணுவதற்கு, ஒரு கிலோ முதல் 1.25 கிலோ வரை சேதம் செய்கின்றன. இதனால் 10 முதல் 12 சதவிகிதம் வரை மகசூல் இழப்புக்கு வாய்ப்பாகிறது. எலிகளின் இனப்பெருக்க வேகம் அதிவேகமாக இருக்கும்.இதனால் விவசாயிகளுக்கு எலி முக்கிய எதிரியாக உள்ளது.
சாகுபடியற்ற நிலங்களின் வரப்புகளை உடைத்து எலிகளை அழிக்க வேண்டும். வலைகளுக்கு அருகில் கிட்டிகள் வைத்தும், மருந்து கலந்த உணவு வைத்தும், வயலில் சிறு குச்சிகள் ஊன்றி வைப்பதன் மூலம் ஆந்தைகள் அதில் அமர்ந்து எலிகளை பிடிக்கச் செய்தும் கட்டுப்படுத்தலாம். மருந்து கையாளும் முறை, அளவு குறித்த தொழில்நுட்பங்களுக்கு விவசாய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE