'கப்' அடிக்கும் கழிப்பிடம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
நத்தம் : நத்தம் பஸ் ஸ்டாண்ட் இலவச கழிப்பிடத்தில் சிறுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.நத்தத்தில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகம் அமைத்தபோது மேற்கு பகுதியில் இலவச சிறுநீர் கழிப்பிடமும் அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.இதன் பிறகு கழிப்பிட வடிகால் துார்ந்து கழிவுநீர் வெளியேற முடியாமல்

நத்தம் : நத்தம் பஸ் ஸ்டாண்ட் இலவச கழிப்பிடத்தில் சிறுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

நத்தத்தில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகம் அமைத்தபோது மேற்கு பகுதியில் இலவச சிறுநீர் கழிப்பிடமும் அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.இதன் பிறகு கழிப்பிட வடிகால் துார்ந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கியது. இதனால் கழிவுநீர் வெளியேறும் குழாயுடன் புதிய இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்தது. இதிலும் தற்போது அடைப்பு ஏற்பட்டு கழிப்பிடத்தினுள் நுழைய முடியாத அளவிற்கு சிறுநீர் தேங்கியுள்ளது.

பயணிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டு செல்கின்றனர். மழை நேரங்களில் நாற்றம் அப்பகுதி முழுவதும் பரவுவதாக புகார் எழுந்துள்ளது. கழிப்பிடத்தில் சிறுநீர் வெளியேறும் வகையில் சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார் கூறுகையில், 'இதுகுறித்து எனது கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும் உடனே ஆயுவு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X