பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தேடி வரும் யானைகள்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சின்னமனுார் : வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரை தேடி யானைகள் ைஹவேவிஸ் ரோட்டில் உலா வருகிறது. சுற்றுலா பயணிகள் உஷாராக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. மேகமலை, குமுளி, கம்பமெட்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள்

சின்னமனுார் : வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரை தேடி யானைகள் ைஹவேவிஸ் ரோட்டில் உலா வருகிறது. சுற்றுலா பயணிகள் உஷாராக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. மேகமலை, குமுளி, கம்பமெட்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீரை தேடி இடம் பெயர்ந்து செல்கின்றன. மேகமலை, ைஹவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் தேயிலை தோட்டங்களில் யானைகள் உலா வருவது வழக்கம். ஆனால் வறட்சியால் சில நாட்களாக ைஹவேவிஸ், இரவங்கலாறு, வெண்ணியாறு ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மக்கள் அச்சமடைந்துள்ளனர். ைஹவேவிஸ் பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் உஷாராக இருக்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X