மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் வாழை அதிக ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. இதனால் ஆண்டு முழுவதும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு எக்டேருக்கு ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை செலவு செய்கின்றனர்.
நன்கு பலன் தரும் தருவாயில் ஏப். 1ல் மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றால் பெரியகுளம் தாலுகாவில் 50 ஏக்கர், சின்னமனுார், கம்பம் பகுதியில் 20 ஏக்கரில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகினர்.இயற்கை பேரிடர் இடர்பாடுகளால் சேதமடைந்த வாழைக்கு எக்டேருக்கு ரூ.18,000 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கலாம் என்றிருந்தது. இத் தொகையை சமீபத்தில் உயர்த்தி ரூ.20,000 வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வாழை சாகுபடிக்கு இழப்பீடு கோரியுள்ளனர். இந்த மனுக்கள் மீது வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் துறையினர் ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும்.அதிகாரிகள் முதலில் சட்டசபை தேர்தலை காரணம் காட்டி சான்று வழங்காமல் தாமதித்துள்ளனர். ஆனால் தேர்தல் முடிந்து மூன்று நாட்களாகியும் சான்றுகள் வழங்காமல் உள்ளதால் வாழை விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து சான்று வழங்கி நிவாரணம் பெற்றுத்தர வலியுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE