பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டும் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டும், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் காங்., வேட்பாளர் செல்வபெருந்தகையும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், 82; காட்பாடி தொகுதி வேட்பாளர். ஏற்கனவே, கொரோனா தடுப்பூசியை, விதிமுறைப்படி, இரண்டு 'டோஸ்' போட்டுள்ளார். அதன்பின், தி.மு.க., கூட்டணி

இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டும், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் காங்., வேட்பாளர் செல்வபெருந்தகையும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், 82; காட்பாடி தொகுதி வேட்பாளர். ஏற்கனவே, கொரோனா தடுப்பூசியை, விதிமுறைப்படி, இரண்டு 'டோஸ்' போட்டுள்ளார். அதன்பின், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற, தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டினார்.இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததால், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்தார். அதில், தொற்று உறுதியானதால், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.


செல்வபெருந்தகை

ஸ்ரீபெரும்புதுார் காங்., வேட்பாளர் செல்வபெருந்தகை, 55. தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வந்த இவருக்கு, சில நாட்களாக காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் இருந்தன. பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானதால், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த வேட்பாளர்கள், அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டும், துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பூசியை பொறுத்த வரை, 100 சதவீதம் உத்தரவாதம் இல்லை. ஆனாலும், தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் பலருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்படாது. ஒரு சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், பெரிதாக உடல் நல பாதிப்புகள் இருக்காது.
அதுபோலவே, 82 வயதான துரைமுருகனுக்கு தொற்று ஏற்பட்டாலும், பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X