பழநி : பழநியில் பொதுமக்கள் கொரோனா பரவல் குறித்த அச்சமின்றி மாஸ்க் அணிவதை மறந்து, சமூக விலகலை கடைபிடியாது நடமாடுகின்றனர்.
பழநிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள், பொதுமக்கள் வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அதனை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. கடைவீதிகள், பஸ் ஸ்டாண்ட், கோயில் பகுதிகளில் கூட்டமாக சேர்வது, சமூகவிலகல் இன்றி நடமாடுவது அதிகரித்துள்ளது.
பெரும்பாலோர் முகக்கவசம் அணிவதே இல்லை.சுகாதாரத்துறையினர் அவ்வப்போது அறிவுறுத்தியும் அவற்றை கடைபிடிப்பதில்லை. கடைகளில் கைகழுவும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். இதுவும் சில கடைகளில் மட்டும் கடைபிடிக்கப்படுகிறது.பழநியில் பிப்ரவரியைவிட மார்ச்சில் தொற்று பரவல் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் அதிக அளவில் பரவியுள்ளது. எனவே, பொதுமக்கள் சமூக அக்கறையுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE