வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தென்னையில் விளைச்சல் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தென்னையில் விளைச்சல் பாதிப்பு

Added : ஏப் 09, 2021
Share
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் வெயில் மற்றும் வெப்ப தாக்குதலால் தென்னை மரங்களில் விளைச்சல் பாதித்துள்ளது.வைகை அணை நீர் தேக்கத்தை ஒட்டி உள்ள குன்னுார், அரப்படித்தேவன்பட்டி, கரட்டுப்பட்டி, வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான வெள்ளையத்தேவன்பட்டி, டி.அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, டி.புதுார், புள்ளிமான்கோம்பை, டி.வி.ரெங்கநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் வெயில் மற்றும் வெப்ப தாக்குதலால் தென்னை மரங்களில் விளைச்சல் பாதித்துள்ளது.

வைகை அணை நீர் தேக்கத்தை ஒட்டி உள்ள குன்னுார், அரப்படித்தேவன்பட்டி, கரட்டுப்பட்டி, வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான வெள்ளையத்தேவன்பட்டி, டி.அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, டி.புதுார், புள்ளிமான்கோம்பை, டி.வி.ரெங்கநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன

சில ஆண்டுகளாக ஆண்டிபட்டி பகுதியில் தொடரும் வறட்சியால் தென்பகுதியில் உள்ள தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, சேவாநிலையம், கணேசபுரம் உட்பட பல கிராமங்களில் கிணற்றுப்பாசன நிலங்களில் இருந்து தென்னை மரங்கள் அழிந்து விட்டன. வறட்சியால் பராமரிக்க முடியாத மரங்களை விவசாயிகள் வெட்டி அப்புறப்படுத்தி விட்டனர்.

வெயிலின் தாக்கம், நிலத்தடிநீர் பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. தற்போது எஞ்சியுள்ள மரங்களில் வெயில் தாக்கத்தால் குரும்பை' உதிர்வு அதிகமாகிறது.ஆண்டிபட்டி விவசாயி வடிவேல் கூறியதாவது:

ஆண்டிபட்டி பகுதியில் தென்னையில் நாட்டு ரகம், நெட்டை - குட்டை, வீரிய ஒட்டு ரகங்கள் உள்ளன. தென்னை காய்ப்புக்கு சீசன் கிடையாது. மரங்கள் ஆண்டு முழுவதும் விளைச்சல் தரும். தென்னையில் பாளை வெடித்து காய் வளர ஆறு மாதங்களாகும். வெயிலின் தாக்கத்தால் மூன்று மாதம் வளர்ந்த குரும்பை தற்போது அதிகம் உதிர்கிறது. இதனால் விளைச்சலில் பாதிப்பு ஏற்படுகிறது. மழை பெய்து வெப்பம் தணிந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இல்லையேல் பாதிப்பு நீடிக்கும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X