சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:கொலை வழக்கில், மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை, சென்னை விமான நிலையத்தில், குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்தவர் ராஜா, 50; எலக்ட்ரீஷியன். இவர், ராமநாதபுரத்தில், 2018ல், கோஷ்டி மோதல் காரணமாக நடந்த கொலையில், முக்கிய குற்ற வாளியாக தேடப்பட்டு வந்தார்.இதை அறிந்த ராஜா, போலீசாரிடம் சிக்காமல், வெளிநாட்டிற்கு தப்பிச்

சென்னை:கொலை வழக்கில், மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை, சென்னை விமான நிலையத்தில், குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்தவர் ராஜா, 50; எலக்ட்ரீஷியன். இவர், ராமநாதபுரத்தில், 2018ல், கோஷ்டி மோதல் காரணமாக நடந்த கொலையில், முக்கிய குற்ற வாளியாக தேடப்பட்டு வந்தார்.இதை அறிந்த ராஜா, போலீசாரிடம் சிக்காமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவானார்.

ராமநாதபுரம் எஸ்.பி., ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் அறிக்கை அனுப்பினார். இந்நிலையில், ஐக்கிய அரபு நாட்டின் துபாய் நகரில் இருந்து, 'பிளை துபாய்' விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த ராஜாவின் பாஸ்போட்டை, குடியுரிமைத்துறை அதிகாரிகள் சோதனை யிட்டனர். அப்போது, கொலை வழக்கில், மூன்று ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்தது. ராஜாவை கைது செய்த குடியுரிமைத் துறையினர், அவரை ராமநாதபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X