சென்னை:தியேட்டர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் ஆதரவு தர தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா முழுதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. மஹாராஷ்டிராவில், வரும், 30ம் தேதி வரை சினிமா தியேட்டர்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சில கட்டுப்பாடுகளை தமிழகஅரசு நேற்று அறிவித்தது. இதன்படி, சினிமா தியேட்டர்களில், 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
சமீபத்தில் வெளியான கார்த்தி நடித்த, சுல்தான் படத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த, கர்ணன் படம் இன்று வெளியாகிறது. கட்டுப்பாடு குறித்து, தாணுவின் டுவிட்டர் பதிவு:சொன்னது சொன்னபடி, கர்ணன் படம் தியேட்டரில் வெளியாகும்.அரசின் அறிவிப்பின்படி, 50 சதவீத இருக்கையுடன், தக்க பாதுகாப்போடு படம் திரையிடப்படும். ரசிகர்கள் பேராதரவை தருமாறு, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE