கூடலுார் : லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக்கிற்காக மணி மண்டபம் லோயர்கேம்பில் கடந்த 2013 ஜன. 15 ல் திறக்கப்பட்டது. சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவுவதால் மணிமண்டபத்தைச் சுற்றிலும் உள்ள நடைபாதையில் நடந்து செல்ல முடிவதில்லை. மேலும் சிலை அமைந்துள்ள கட்டடத்தைத் தவிர மற்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாத நிலை உள்ளது. அதனால் நிழற்குடை வசதி ஏற்படுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE