கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சேலம் பெருமாள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க,நடவடிக்கை: ஐகோர்ட்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:சேலம், பெருமாள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க, அறநிலையத் துறை எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம், அல்லிகுட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: சேலம் மேற்கு தாலுகா, பள்ளப்பட்டி பிரதான சாலையில், பெருமாள் கோவில் இருந்தது. வருவாய் ஆவணங்களிலும், இந்த கோவில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை:சேலம், பெருமாள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க, அறநிலையத் துறை எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், அல்லிகுட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: சேலம் மேற்கு தாலுகா, பள்ளப்பட்டி பிரதான சாலையில், பெருமாள் கோவில் இருந்தது. வருவாய் ஆவணங்களிலும், இந்த கோவில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, கோவில் அங்கு இல்லை.கோவில் பெயரில் உள்ள நிலத்தை பாதுகாக்கக்கோரி, மனு அளித்துள்ளேன். கோவில் நிலத்தை மீட்கவும், பாதுகாக்கவும்,அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடுத்த ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ''சேலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள கோவில் நிலத்தின் மதிப்பு, 50 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். கோவிலை அகற்றி விட்டனர்; சிலையை திருடி விட்டனர். சட்டவிரோதமாக நிலத்தை விற்றுள்ளனர். இதில், முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது,'' என்றார்.

அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜராகி, ''தக்கார் நியமனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தக்கார் நியமனம் தொடர்பாகவும், கோவில் சொத்துக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தற்போதைய நில உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து, உரிய ஆவணங்களுடன், வருவாய் துறை அறிக்கை அளிக்க வேண்டும். கோவில் சொத்துக்கள் தொடர்பாக விற்பனை பதிவு ஏதும் நடந்திருந்தால்,வருவாய் துறையுடன் இணைந்து, பத்திரப்பதிவு துறையும் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இந்தக் கோவில் நிலம் தொடர்பான ஆவணங்களையும், தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X