பெரியகுளம்: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்கும் இடத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்கவருகின்றனர். நீரோடைப்பகுதியிலிருந்து அருவிப்பகுதிக்கு செல்வதற்கு கற்களை செதுக்கி பல ஆண்டுகளுக்கு முன் படிக்கட்டுகளாக அமைத்துள்ளனர்.
தற்போது இறங்கும் இடத்தில் 5 படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. இதனால் அவற்றை தாவி இறங்கும் நிலை உள்ளது. இதில் சிலர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். படிக்கட்டுகளை சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE