திண்டுக்கல் : 'சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4.36 லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை' என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 77 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. பழநி தொகுதியில் உள்ள 2 லட்சத்து 77 ஆயிரத்து 214 வாக்காளர்களில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 283 பேர், ஒட்டன்சத்திரத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 216 பேரில் 2 லட்சத்து 408 பேர், ஆத்துாரில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 442 பேரில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 209 பேர், நிலக்கோட்டையில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 44 பேரில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 203 பேர் ஓட்டளித்தனர்.
நத்தத்தில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 267 பேரில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 648 பேர், திண்டுக்கல்லில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 பேரில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 590 பேர், வேடசந்துாரில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 311 பேரில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 65 பேர் ஓட்டளித்தனர். மாவட்டம் முழுதும் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்களில் 14 லட்சத்து 4 ஆயிரத்து 406 பேர் மட்டுமே ஓட்டை பதிவு செய்தனர்.நான்கு லட்சத்து 36 ஆயிரத்து 671 பேர் ஓட்டளிக்கவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE