திண்டுக்கல் : மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையால் ரூ.1 கோடியே 85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் செல்லக் கூடாது. ஆவணம் இல்லையேல் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்காக வாகனங்களை சோதனையிட 24 பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்புக்குழுக்கள் என 24 மணி நேரமும் செயல்பட்டன.
தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் ஓட்டுப்பதிவு வரை தீவிர சோதனைகள் நடந்தன. இதில் திண்டுக்கல், வடமதுரை, நிலக்கோட்டை, பழநி, வேடசந்தூர், நத்தம் என மாவட்டம் முழுவதும் ரூ.1 கோடியே 85 லட்சத்து 42 ஆயிரத்து 404 வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் பணத்தை திரும்பப் பெற, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெறலாம் என தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலும் வியாபாரிகள், பொதுமக்களின் பணமே உள்ளது. அரசியல் புள்ளிகள் யாரும் பெரிய அளவில் பணத்துடன் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE