முருங்கைக்காய் கிலோ ரூ.40க்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முருங்கைக்காய் கிலோ ரூ.40க்கு விற்பனை

Added : ஏப் 09, 2021
Share
தேவதானப்பட்டி : பெரியகுளம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.பெரியகுளம் ஒன்றியம் தேவதானப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, ரெங்கநாதபுரம் கிராமங்களில் 200 ஏக்கருக்கும் அதிகமாக முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 8 மாதம் பலன்

தேவதானப்பட்டி : பெரியகுளம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பெரியகுளம் ஒன்றியம் தேவதானப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, ரெங்கநாதபுரம் கிராமங்களில் 200 ஏக்கருக்கும் அதிகமாக முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 8 மாதம் பலன் கிடைக்கும். இங்கு விளைகின்ற முருங்கைக்காய் ருசியாக இருப்பதால் சென்னை, ஒட்டன்சத்திரம், ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீரின் தேவை குறைவாக இருப்பதால் வறண்ட நிலங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

வியாபாரிகள் சிலர், விவசாயிகள் பராமரிப்பு செல்விற்கு முன்பணம் தருகின்றனர். இதனால் முருங்கை சாகுபடியின் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக பெரியகுளம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X