கொரோனா பரவலை தடுக்க தீவிரம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க தீவிரம்

Added : ஏப் 09, 2021
Share
சென்னை:தமிழகம் முழுதும், கொரோனா தொற்று தடுப்பு பணிகளை முடுக்கி விடவும், கண்காணிக்கவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்கள், கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பரிசோதனை முடிவை, விரைவாக தெரிவிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு

சென்னை:தமிழகம் முழுதும், கொரோனா தொற்று தடுப்பு பணிகளை முடுக்கி விடவும், கண்காணிக்கவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பரிசோதனை முடிவை, விரைவாக தெரிவிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான பாதுகாப்பு மையத்தின் செயல்பாடு மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும் என, தமிழக அரசின் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

கண்காணிப்பு அலுவலர்கள் யார், யார்?

மாவட்டம் - கண்காணிப்பு அலுவலர்

அரியலுார் - டேரஸ் அஹமது, வழிகாட்டிப்பிரிவு நிர்வாக இயக்குனர்

செங்கல்பட்டு - சமயமூர்த்தி, போக்குவரத்து துறை செயலர்

கோவை - முருகானந்தம், தொழில்துறை செயலர்

கடலுார் - ககன்தீப்சிங் பேடி, வேளாண்துறை செயலர்

தர்மபுரி - நீரஜ்மிட்டல், செயலர், வழிகாட்டிப்பிரிவு

திண்டுக்கல் - மங்கட்ராம் சர்மா, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலர்

ஈரோடு - காகர்லா உஷா, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் செயலர்

காஞ்சிபுரம் - சுப்ரமணியன், கனிமவளத்துறை கமிஷனர்

கன்னியாகுமரி - ஜோதி நிர்மலாசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மேலாண் இயக்குனர்

கரூர் - விஜயராஜ்குமார், மாற்றுத்திறனாளிகர் நலத்துறை செயலர்

கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ், வணிக வரித்துறை செயலர்

மதுரை - சந்திரமோகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர்

நாகப்பட்டினம், மயிலாடுதுறை - முனியநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர்

நாமக்கல் - தயானந்த் கட்கரியா, உணவு வழங்கல் துறை செயலர்

நீலகிரி - சுப்ரியா சாகு, தேயிலை தொழிற்சாலை கூட்டமைப்பு மேலாண் இயக்குனர்

பெரம்பலுார் - அனில் மெஸ்ரம், மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் செயலர்

புதுக்கோட்டை - ஷம்பு கல்லோலிகர், கைத்தறித்துறை செயலர்

ராமநாதபுரம் - தர்மேந்திர பிரதாப் யாதவ், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயலர்

ராணிப்பேட்டை - லட்சுமி பிரியா, வணிகவரித்துறை கூடுதல் கமிஷனர்

சேலம் - நசிமுதீன், தொழிலாளர் நலத்துறை செயலர்

சிவகங்கை - மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர்

தென்காசி - அனுஜார்ஜ், தொழில் துறை கமிஷனர்

தஞ்சாவூர் - சுப்பையன், தோட்டக்கலைத்துறை இயக்குனர்

தேனி - கார்த்திக், நெடுஞ்சாலைத்துறை செயலர்

துாத்துக்குடி - குமார் ஜெயந்த், கருவூலத்துறை கமிஷனர்

திருச்சி - ரீட்டா ஹரீஸ் தாகர், நிதித்துறை சிறப்பு செயலர்

திருநெல்வேலி - அபூர்வா, உயர் கல்வித்துறை செயலர்

திருப்பத்துார் - ஜவஹர், போக்குவரத்து துறை கமிஷனர்

திருப்பூர் - கோபால், கால்நடைத்துறை செயலர்

திருவள்ளூர் - பாஸ்கரன், நகராட்சி நிர்வாகத்துறை கமிஷனர்

திருவண்ணாமலை - தீரஜ்குமார், பள்ளிக்கல்வித்துறை செயலர்

திருவாரூர் - ஷில்பா பிரபாகர் சதீஸ், சுகாதாரத்துறை இணை செயலர்

வேலுார் - ராஜேஷ் லகானி, காப்பகம் கமிஷனர்

விழுப்புரம் - ஹர்சகாய் மீனா, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை பயிற்சி செயலர்

விருதுநகர் - மதுமதி, சமூக நலத்துறை செயலர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X