தமிழ்நாடு

12 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு!

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜன. 16 தேதி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதார மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.மார்ச் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்.1 முதல் அனைவருக்கும் தடுப்பூசி என அறிவிக்கப்பட்டிருந்து. கொரோனா பரவல் அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்தும் ஆர்வமும் மக்களிடம் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜன. 16 தேதி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதார மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மார்ச் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்.1 முதல் அனைவருக்கும் தடுப்பூசி என அறிவிக்கப்பட்டிருந்து. கொரோனா பரவல் அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்தும் ஆர்வமும் மக்களிடம் அதிகரித்துள்ளது. தற்போது வரை சுகாதாரத்துறையினர், முன் களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 70ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு 2 வாரத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு டோஸ் தடுப்பூசிகள் வருகிறது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் தெரிவித்ததாவது:இதுவரை சுகாதாரப் பணியாளர்களில் 97 சதவீதம், முன் களப் பணியாளர்களில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களை பொறுத்தவரை இதுவரை 32ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 70 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இரு வாரங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X