பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளரைவிட அதிக ஓட்டுப்பதிவு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டு ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தவர்களை விட ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எண்ணிக்கை அதிகம் காட்டியதால் தாமதம் ஏற்பட்டது.பழைய வத்தலக்குண்டு ஓட்டுச்சாவடியில் தேர்தல் நாளன்று 390 பேர் ஓட்டளித்தனர். முடிவில் ஏஜென்டுகள் சரி பார்த்தபோது ஓட்டளித்தவர்களை விட எந்திரத்தில் கூடுதலான எண்ணிக்கை காட்டியது.இதனால் தேர்தல் அலுவலர்கள், ஏஜென்டுகள்

வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டு ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தவர்களை விட ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எண்ணிக்கை அதிகம் காட்டியதால் தாமதம் ஏற்பட்டது.

பழைய வத்தலக்குண்டு ஓட்டுச்சாவடியில் தேர்தல் நாளன்று 390 பேர் ஓட்டளித்தனர். முடிவில் ஏஜென்டுகள் சரி பார்த்தபோது ஓட்டளித்தவர்களை விட எந்திரத்தில் கூடுதலான எண்ணிக்கை காட்டியது.இதனால் தேர்தல் அலுவலர்கள், ஏஜென்டுகள் இடையே பிரச்னை எழுந்தது. அ.தி.மு.க., தி.மு.க.,வினர் ஓட்டுச்சாவடிக்கு வந்தனர். அவர்களிடம் மாதிரி ஓட்டு பதிவுகளை அழிக்காமல் விட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இருப்பினும் விவிபேட் இயந்திரத்தில் ஓட்டளித்துள்ள சீட்டுகளை பத்திரமாக எடுத்து வைத்து சரிபார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் ஓட்டுப்பெட்டி சீல் வைப்பதற்கு தாமதம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X