வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு, எழுவனம்பட்டி துணை மின்நிலைய பிரச்னையால் கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கிறது.
வத்தலக்குண்டு, எழுவனம்பட்டி துணை மின் நிலையங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தன. இதனை சரி செய்ய சென்னையிலிருந்து குழுவினர் வரவேண்டும் என்பதால் அருகிலுள்ள அய்யம்பாளையம், நிலக்கோட்டை, சித்தர்கள்நத்தம் துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.கோடைகாலம் என்பதால் நுகர்வு அதிகரித்து வழக்கத்தை விட கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது.
அதேசமயம் துணைமின் நிலைய பழுதால் கிராமங்களில் 6 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது. நேற்று முன்தினம் வத்தலகுண்டு நகர் முழுவதும் 3 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டது.மின்சாரம் இல்லாததால் கோடையில் பொழுதை கடத்துவதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டனர். எனவே, துணை மின் நிலையத்தில் பழுதடைந்த டிரான்ஸ் பார்மர்களை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE