பொது செய்தி

தமிழ்நாடு

சின்னாளபட்டியில் மூன்று கட்டுப்பாட்டு பகுதிகள்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் 3 வார்டுகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.பேரூராட்சியின் 4வது வார்டைச் சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர், 12வது வார்டு ஜீவா நகரைச் சேர்ந்த 37, வயது வாலிபர் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்காக சின்னாளப்பட்டி மருத்துவமனைக்கு வந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கும், தொற்று உறுதியானது.தொற்று பாதித்த மூவரும்

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் 3 வார்டுகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சியின் 4வது வார்டைச் சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர், 12வது வார்டு ஜீவா நகரைச் சேர்ந்த 37, வயது வாலிபர் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்காக சின்னாளப்பட்டி மருத்துவமனைக்கு வந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கும், தொற்று உறுதியானது.தொற்று பாதித்த மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 3 வார்டுகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளீச்சிங் பவுடர் தூவுதல், துப்புரவு, கபசுர குடிநீர் வழங்கல் பணி மும்முரமாக நடக்கிறது. சுகாதாரத்துறை சார்பில், இப்பகுதியில் கூடுதலாக பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X