மூதாட்டி மர்ம மரணம் : கணவரிடம் விசாரணை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி மர்ம மரணம் : கணவரிடம் விசாரணை

Added : ஏப் 09, 2021
Share
மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே கொச்சுதோவாளை எஸ்.என். ஜங்ஷனில் ஜார்ஜ் மனைவி சின்னம்மா 65, என்பவர் வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஜார்ஜிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.அவர்கள் இருவரும் மட்டும் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மாடியில் படுத்திருந்த ஜார்ஜ் கீழ் தளத்திற்கு வந்தபோது அங்கு சின்னம்மா முகத்தில் காயத்துடன் இறந்து

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே கொச்சுதோவாளை எஸ்.என். ஜங்ஷனில் ஜார்ஜ் மனைவி சின்னம்மா 65, என்பவர் வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஜார்ஜிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அவர்கள் இருவரும் மட்டும் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மாடியில் படுத்திருந்த ஜார்ஜ் கீழ் தளத்திற்கு வந்தபோது அங்கு சின்னம்மா முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். கட்டப்பனை டி.எஸ்.பி. சந்தோஷ்குமார் தலைமையில் போலீசார் ஜார்ஜிடம் விசாரித்தபோது மனைவி அணிந்திருந்த தங்க செயின் மற்றும் மோதிரம் ஆகியவை மாயமானதாக தெரிவித்தார்.

அவருடைய பேச்சில் முரண்பாடு உள்ளதால் தீவிரமாக விசாரிக்கின்றனர். நகைகள் மாயமானதற்கான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. சின்னம்மா எவ்வாறு இறந்தார் என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X