கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக விவகாரம் :சென்னை உயர் நீதிமன்றம் முடிவு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:புதிய கலெக்டர் அலுவலகம் அமைய உள்ள கோவில் நிலத்தை மதிப்பீடு செய்ய, தனிப்பட்ட மதிப்பீட்டாளர்களை நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நான்கு பேர் பட்டியலை அனுப்பும்படி, வங்கி உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரம் எனும் இடத்தில் உள்ள, அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு

சென்னை:புதிய கலெக்டர் அலுவலகம் அமைய உள்ள கோவில் நிலத்தை மதிப்பீடு செய்ய, தனிப்பட்ட மதிப்பீட்டாளர்களை நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நான்கு பேர் பட்டியலை அனுப்பும்படி, வங்கி உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரம் எனும் இடத்தில் உள்ள, அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் நிலத்தை, அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க, அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுக்க முடிவு செய்து, அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.

கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதித்த முதல் பெஞ்ச், நிலத்தை மதிப்பீடு செய்ய, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நீதிபதியை நியமித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''வீரசோழபுரத்தில், 34 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 12 கோடி ரூபாய் வருகிறது.

மாத வாடகையாக நிலத்துக்கு, 1.60 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கலாம்,'' என்றார். இதை ஏற்க மறுத்த மனுதாரர் தரப்பு, பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் என்பதால், மாத வாடகையாக, 66 லட்சம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என, கூறியது. இதையடுத்து, இரு தரப்பிலும் குறிப்பிட்டுள்ள தொகையில், கணிசமான வித்தியாசம் இருப்பதால், தனிப்பட்ட மதிப்பீட்டாளர்களை நியமிக்க, முதல் பெஞ்ச் முடிவு செய்தது.

மதிப்பீட்டாளர்கள் நான்கு பேரின் பெயர்களை அளிக்கும்படி, பாரத ஸ்டேட் வங்கி உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 19ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X