பொது செய்தி

தமிழ்நாடு

பழநி கோயிலில் ரூ.2.82 கோடி காணிக்கை; கோட்டை மாரியம்மனுக்கு ரூ.27 லட்சம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
பழநி : பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ரூ.2.82 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.பழநி கோயிலில் சமீபத்தில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையடுத்து 57 நாட்களுக்கு பிறகு நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நட ந்தது.இதில் 1172 கிராம் தங்கம், 23 ஆயிரத்து 645 கிராம் வெள்ளியும் கிடைத்தது. ரொக்கமாக ரூ. 2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 மற்றும் 148

பழநி : பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ரூ.2.82 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.

பழநி கோயிலில் சமீபத்தில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையடுத்து 57 நாட்களுக்கு பிறகு நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நட ந்தது.இதில் 1172 கிராம் தங்கம், 23 ஆயிரத்து 645 கிராம் வெள்ளியும் கிடைத்தது. ரொக்கமாக ரூ. 2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 மற்றும் 148 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது.

உண்டியல் எண்ணிக்கையில் செயல் அலுவலர் கிராந்தி குமார்பாடி, அறங்காவலர் குழுத் தலைவர் அப்புகுட்டி, உதவி ஆணையர்கள் செந்தில்குமார், ராமசாமி உட்பட பணியாளர்கள் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது.

கோட்டை மாரியம்மன் கோயில்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.11 முதல் மார்ச் 2 வரை நடந்தது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. கோயில் நிர்வாக அறங்காவலர் சுபாஷினி முன்னிலை வகித்தார். அதில் 468 கிராம் தங்கம், 1,760 கிராம் வெள்ளி மற்றும் ரொக்கம் ரூ.27 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X