பொது செய்தி

தமிழ்நாடு

மலைப்பகுதியில் வேலி காபி சீசன் துவக்கம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் வேலி காபி ( ட்ரீ காபி) சீசன் தொடங்கியுள்ளது.தாண்டிக்குடி பகுதியில் வேலி காபி பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. இங்கு மற்றொரு ரகமான அராபிகா காபி 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த காபி சீசன் நிறைவடையும் நிலையில் பூக்கள் பூத்து வருகின்றன.பொதுவாக மலைப் பகுதியில் விவசாய தோட்ட எல்லைகளை காட்டுவதற்கு, ஆமணக்கு

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் வேலி காபி ( ட்ரீ காபி) சீசன் தொடங்கியுள்ளது.

தாண்டிக்குடி பகுதியில் வேலி காபி பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. இங்கு மற்றொரு ரகமான அராபிகா காபி 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த காபி சீசன் நிறைவடையும் நிலையில் பூக்கள் பூத்து வருகின்றன.பொதுவாக மலைப் பகுதியில் விவசாய தோட்ட எல்லைகளை காட்டுவதற்கு, ஆமணக்கு செடிகளை நடுவர். இதற்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானது வேலி காபி.

இது 'ரோபஸ்டா' இனத்தை சேர்ந்தது. இவ்வகை காபியை வேலி பராமரிப்புக்காக விவசாயிகள் நடவு செய்தனர். மற்ற பயிர்களுக்கு இடையூறு செய்யாது என்பதால், விவசாயிகளுக்கு வருவாயும், பயிர் பாதுகாப்பும் கிடைத்தது. காலப்போக்கில் இவ்வகை காபியால் நோய் பாதிப்பு தொடர்ந்ததால் தவிர்க்கப்பட்டது.

இக்காபிக்கு மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு என்றாலும், நோய் பாதிப்பால் இதன் சாகுபடி பரப்பு சுருங்கி விட்டது. தற்போது வேலி காபி மலைப்பகுதியில் தோட்ட வேலி ஓரங்களில் அழகான சிவந்த காபி பழங்களுடன் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X