சென்னை:கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் பணிகளில், கூடுதலாக, 2,715 சுகாதார ஆய்வாளர்கள், தற்காலிகமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், டெங்கு பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தார். இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுகாதாரத் துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை: டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய, கடலுார், வேலுார் உட்பட, ஒன்பது இடங்களில், பூச்சியியல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், 2,894 உள்ளன. இதில், 384 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் பணிகளில், கூடுதலாக, 2,715 சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE