அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆட்சி கட்டில் எங்களுக்கு தான்' அ.தி.மு.க., - தி.மு.க., நம்பிக்கை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும், ஆட்சிக்கு வந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன், ஓட்டு எண்ணிக்கை நாளை, ஆவலுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளுடன் சேர்த்து, காலியாக உள்ள, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும், 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. சாதனைகாலை முதல், மக்கள் விறுவிறுப்பாக ஓட்டுக்களை பதிவு செய்தனர். மதியத்துக்கு மேல், ஓட்டுப்பதிவு சற்று

அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும், ஆட்சிக்கு வந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன், ஓட்டு எண்ணிக்கை நாளை, ஆவலுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளுடன் சேர்த்து, காலியாக உள்ள, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும், 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. சாதனைகாலை முதல், மக்கள் விறுவிறுப்பாக ஓட்டுக்களை பதிவு செய்தனர். மதியத்துக்கு மேல், ஓட்டுப்பதிவு சற்று மந்தமானது. ஓட்டுப்பதிவு முடிவில், மாநிலம் முழுதும், 72.78 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.

கரூர் மாவட்டத்தில், அதிகபட்சமாக, 83.92 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், 70 சதவீதத்திற்கும் குறைவாகவும், சென்னை மாவட்டத்தில், 60 சதவீதத்திற்கும் குறைவாகவும், ஓட்டுப்பதிவு நடந்தது.எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது, அனைத்து தரப்பினரிடமும், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து, இரண்டு முறை, ஆட்சி கட்டிலில் அமர்ந்த அ.தி.மு.க., இந்த தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' சாதனை படைக்க, தீவிரமாக தேர்தல் பணியாற்றியது. அதே நேரத்தில், 10 ஆண்டுகளாக, ஆட்சியில் இல்லாத தி.மு.க., இம்முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன், தேர்தல் பணியாற்றியது.இவ்விரு கட்சிகளுக்கும் இணையாக, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., கூட்டணியும், நாம் தமிழர் கட்சியும் களப் பணியாற்றின.


பட்டியல்

தேர்தல் பிரசாரம் துவக்கத்தில், தி.மு.க.,வின் கை ஓங்கியது. கருத்து கணிப்புகளும், அவர்களுக்கு சாதக மாகவே அமைந்தன. பிரசாரம் சூடு பிடித்த பின், அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரித்ததாக, தகவல் வெளியானது.மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., ஆகியவை அதிக ஓட்டுகளை பெறும் என்றும், தகவல்கள் பரவின.

ஓட்டுப்பதிவு நிறைவடைந்த நிலையில், எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. வரும், 30ம் தேதி மாலை வரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.மே, 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதுவரை முடிவை அறிய, மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், 'நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது' என, தி.மு.க.,வினரும், 'மீண்டும் எங்கள் ஆட்சிதான்' என, அ.தி.மு.க.,வினரும் கூற துவங்கி உள்ளனர். ஒவ்வொருவரும் தாங்கள் வெற்றி பெறுவதற்கான காரணங்களையும், எதிர்க்கட்சி தோற்பதற்கான காரணங்களையும், பட்டியலிட்டு வருகின்றனர்.


ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு ஏன்:வேட்பாளர்களிடம் விசாரணை

'தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்' என, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், விசாரணை நடத்தினார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட்ட தொகுதிகளில், குறைந்த சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், அதிக சதவீதத்தில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக, சென்னையில் ஓட்டு சதவீதம் குறைந்திருப்பது, தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆலோசனை வழங்கிய நிறுவன நிர்வாகிகளிடம், தேர்தல் அன்று, ஸ்டாலின் விசாரணை நடத்தினார்.

'பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி, தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்' என, அந்நிறுவனத்தினர், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஓட்டு சதவீதம் குறைந்தது, தி.மு.க., தலைமைக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், நேற்று சென்னை அறிவாலயத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த, தி.மு.க., வேட்பாளர்கள் சிலரை அழைத்து ஸ்டாலின் பேசினார். அவர்களிடம், 'ஓட்டு சதவீதம் குறைந்தது ஏன்' என்பதற்கான காரணங்களை கேட்டறிந்தார்.

'சீட்' கிடைக்காத ஏமாற்றத்தால், தேர்தல் பணிகள் செய்யாமல் ஒதுங்கியிருந்த அதிருப்தியாளர்கள் யார் யார் என்ற பட்டியலையும் கேட்டுள்ளார். அவர்கள் மீது, ஓட்டு எண்ணிக்கைக்கு பின், நடவடிக்கை பாயும் வாய்ப்பு உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X