பொது செய்தி

தமிழ்நாடு

பிரசார கூட்டங்களில் பரவிய கொரோனா: இம்மாத இறுதியில் உச்சம் தொடும்

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை :'தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பரவிய கொரோனா தொற்று இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும்' என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்தல் பிரசார கூட்டங்களில் எந்த ஒரு கட்சியும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தொடர்ந்து
Election Campaign, Corona Virus, virus Spread, Covid19, பிரசார கூட்டங்கள், கொரோனா ,உச்சம் தொடும்

சென்னை :'தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பரவிய கொரோனா தொற்று இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும்' என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசார கூட்டங்களில் எந்த ஒரு கட்சியும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தொடர்ந்து பொது மக்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர். அதன்படி கொரோனா தொற்று இம்மாத இறுதிக்குள் உச்சத்தை தொடும் என சுகாதாரத்துறை கணித்துள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொது மக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் தொற்று பரவலை தடுக்க முடியவில்லை. இதனால் ஒரே குடும்பத்தில் 10க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு எவ்வித அறிகுறியும் இல்லாத பலர் வெளியே சுற்றுகின்றனர். அவர்களை அடையாளம் காணுவது சவாலான பணி. அவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முக கவசம் மட்டுமே ஆயுதமாக உள்ளது. முக கவசம் அணியாமல் இருக்கும் பட்சத்தில் கொரோனா வைரஸ் ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு செல்லும் போது அதன் வீரியம் அதிகமாக உள்ளது.

தேர்தல் பிரசார கூட்டங்களிலும் இதே பிரச்னையை தான் மக்கள் சந்தித்துள்ளனர். எனவே தொற்று வேகம் அதிகரித்து இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும். அவ்வாறு அதிகரிக்கும் போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தொற்றை தடுக்க அனைவரும் முக கவசம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh G - Hyderabad,இந்தியா
09-ஏப்-202110:31:01 IST Report Abuse
Ganesh G கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழும் கதையாக உள்ளது. கொரோனா அதிகமாகிக் கொண்டு வருகிறது என்று தினம் தினம் சுதகாரத்துறை எண்ணிக்கை மூலம் சொல்லிக்கொண்டு வருகிறது. இவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் அரசியல் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டுகின்றன. தேர்தலைத் தள்ளி வைத்திருந்தால் ஒரளவு கொரோனாவைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். இம்மாத இறுதியில் கொரோனா அதிகரிக்கும்போது தேர்தல் முடிவுகள் வெளிவரும். யார் ஜெயித்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம் வெளியில் வரும். மே 2 க்கு முன்பே முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஏப்-202122:09:44 IST Report Abuse
தமிழவேல் கூட்டத்தை மட்டுமாவது தவிர்க்க முடியாததா ? இந்த லட்சணத்தில், இங்கே இருக்கிறவனுவோ போதாதுன்னு, வடக்கிருந்து பெரிய பெரிய (பொறுப்பான) தலைகள் வேற வந்து, கூட்டம் கூட்டி பத்த வச்சானுவோலே....
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
09-ஏப்-202108:20:48 IST Report Abuse
VENKATASUBRAMANIAN யாருக்கும் வெட்கம் இல்லை
Rate this:
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
09-ஏப்-202116:17:15 IST Report Abuse
Davamani Arumuga Gounder100 ரூபாயாச்சே எங்கள் ஊருக்கு உதயநிதி வந்த பொழுதும், தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் கூட்டத்திற்கும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்தும், எடப்பாடி பழனிசாமி வநுத பொழுதும் பெண்களுக்கு ரூ.200 என்று கொடுத்தும் ஒரே இடத்தில் குவியிலாக மக்கள் இருக்கும் வகையில் செய்து .. அவர்களுக்கிடையில் கொரானாவையும் பரப்பிவிட்டுள்ளார்களா? எது எப்படியோ.. தி.மு.க. - அ.தி.மு.க... இரண்டு கட்சிகளில் இருந்தும் பணம் கிடைத்து விட்டதில்லவா நம் மகளிர்களுக்கு......
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஏப்-202122:14:03 IST Report Abuse
தமிழவேல் இன்னொரு பெரிய பணக்கார, பவுனகாசும், ரோஸ்கலர் நோட்டும் தந்த கட்சியை மறந்துட்டீங்க......
Rate this:
Cancel
09-ஏப்-202102:36:47 IST Report Abuse
ஆப்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் பிரச்சாரத்தின் போது தூங்கினாங்க. யாரையும் எதிர்த்து எதுவும் சொல்லலை. சொன்னா இவிங்களையே வேலையை வுட்டு தூக்கிருவாங்கன்னு பயம். பொது முடக்கம் வர வாய்ப்பில்லைன்ன சுகாதார செயலர் இப்போ வாயே தொறக்கறதில்லை.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
09-ஏப்-202112:13:08 IST Report Abuse
கொக்கி குமாரு சுகாதார துறை அதிகாரிகள் தூங்கவில்லை, அவர்கள் சொல்லி பார்த்தாங்க. யாரும் கேட்கவில்லை. சுடலை போன்று ஒன்றிணைவோம் வான்னு சொல்லி எல்லா மக்களையும் வீதிக்கு வரவைத்தது ஒரு காரணம், கூடவே, அரசியல் பரப்புரையில் கூட்டம் கூட்டுவதற்காக திருட்டு திமுகவினர் மக்களுக்கு 200 ரூபாய் கொடுத்து கூட்டம் கூட்டியதும் ஒரு காரணம்....
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
09-ஏப்-202113:34:17 IST Report Abuse
வந்தியதேவன்உங்க கட்சித் தலைவரு... பிரச்சாரத்துக்கு போகாம.. வீட்லேயே உட்கார்ந்திருந்தாரா...? இல்ல... வீடியோ கான்பிரசிங் மூலம் வாக்கு சேகரித்தாரா...? அவர், இவருக்கு முன்னாடி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்துக்கு கிளம்பி.. ஊர் ஊரா சுத்துனாரு...? உங்க கட்சித் தலைவருக்கு தானா கூட்டம் வந்துடுச்சா... அவங்க காசு கொடுத்துதாய்யா கூட்டி வந்தாங்க...? ஒண்ணும் தெரியாம... கமெண்ட் போடுறது...?...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஏப்-202122:12:09 IST Report Abuse
தமிழவேல் ஆட்சியில இருக்கிறவனுவோளுக்கே இத செய்யக்கூடாதுன்னு தெரியலியே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X