பொது செய்தி

தமிழ்நாடு

எந்த கடையிலும் பொருட்கள் ரேஷன் ஊழியர்கள் மறுப்பு

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் ரேஷன் கார்டுதாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் 2020 அக். முதல் ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் பிற மாநில கார்டுதாரர்கள் தமிழக ரேஷன் கடைகளிலும் தமிழக கார்டுதாரர்கள் மற்ற மாநிலங்களிலும் அத்தியாவசிய பொருட்களை

சென்னை:எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் ரேஷன் கார்டுதாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் 2020 அக். முதல் ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் பிற மாநில கார்டுதாரர்கள் தமிழக ரேஷன் கடைகளிலும் தமிழக கார்டுதாரர்கள் மற்ற மாநிலங்களிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்.அதனுடன் கூடுதலாக தமிழகத்தை சேர்ந்த கார்டுதாரர்கள் மாநிலத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டமும் நடைமுறைக்கு வந்தது.

இதனால் கார்டுதாரர்கள் விருப்பப்படி எந்த கடையிலும் பொருட்களை வாங்குவதால் வேலைக்காக நகரங்களுக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் அடைந்து வந்தனர். இந்நிலையில் ரேஷன் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்குவதாகவும் வேறு முகவரிக்கு உட்பட்டோருக்கு பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய தீர்வு கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-ஏப்-202110:02:51 IST Report Abuse
R.RAMACHANDRAN பொது விநியோக திட்டத்தின் கீழ் அந்தந்த கடைகளுக்கு இணைக்கப்பட்ட கார்டுகளுக்கு வழங்கத் தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு குறைத்து சப்ளை செய்யும் நிலையில் முழுமையாக வழங்க முடியவில்லை என்ற நிலையில் இணைக்கப்படாத கார்டுகளுக்கு பொருட்கள் எப்படி வழங்க முடியும் என்பதை அரசோ மற்றும் எவருமோ சிந்தித்து பார்க்கவில்லை.திட்டங்கள் தீட்டுவதெல்லாம் ஒட்டு வாங்கவே.அவை செயல்படுத்துவதற்கு அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X