சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட்டில் கழுத்தை அறுத்து கொண்ட கைதி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி முன் கைதி ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார்.சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில்அடைக்கப்பட்டார்.இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காகபாண்டியனை போலீசார்

சென்னை:சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி முன் கைதி ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில்அடைக்கப்பட்டார்.இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காகபாண்டியனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி ரவி முன் ஆஜரான பாண்டியன் சிறையில் தன்னை சிறைத்துறை அதிகாரிகள் அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறினார்.மேலும் அவர்கள் செய்த கொடுமைகளை புகாராக எழுதித் தருவதாகவும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிபதி முன் கூறினார்.

பின் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார்.ரத்த வெள்ளத்தில் கிடந்த பாண்டியனை போலீசார்மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து ஐகோர்ட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X