சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலுார் ரேஷன் கடைகளில் டோக்கனோடு குவிந்த மக்கள்

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வேலுார்:வேலுாரில் ரேஷன் கடைகளில் அ.தி.மு.க. கட்சி டோக்கனோடு பணம் கேட்டு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.வேலுார் அருகே சத்துவாச்சாரி 23வது வார்டிலுள்ள ரேஷன் கடைக்கு நேற்று சில பெண்கள் வந்து விற்பனையாளரிடம் அ.தி.மு.க. கட்சி சின்னமுள்ள டோக்கனை கொடுத்து 500 ரூபாய் கேட்டனர். விற்பனையாளர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.டோக்கனோடு வந்த பெண்கள் 'தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வுக்கு
 வேலுார் ரேஷன் கடைகளில்  டோக்கனோடு குவிந்த மக்கள்

வேலுார்:வேலுாரில் ரேஷன் கடைகளில் அ.தி.மு.க. கட்சி டோக்கனோடு பணம் கேட்டு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலுார் அருகே சத்துவாச்சாரி 23வது வார்டிலுள்ள ரேஷன் கடைக்கு நேற்று சில பெண்கள் வந்து விற்பனையாளரிடம் அ.தி.மு.க. கட்சி சின்னமுள்ள டோக்கனை கொடுத்து 500 ரூபாய் கேட்டனர். விற்பனையாளர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.டோக்கனோடு வந்த பெண்கள் 'தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு வந்தவர்கள் இந்த டோக்கனை கொடுத்தனர். தேர்தல் முடிந்ததும் ரேஷன் கடைகளில் கொடுத்தால் 500 ரூபாய் மற்றும் 5000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் கொடுப்பார்கள்' என கூறியதாக தெரிவித்தனர்.

இது தவறான தகவல் எனக்கூறி ரேஷன் விற்பனையாளர் மணிநாதன் பெண்களை திருப்பி அனுப்பினார்.இதேபோல வேலுார் சங்கரன்பாளையம் சைதாப்பேட்டை தோட்டபாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பெண்கள் படையெடுத்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல் 10க்கும் மேற்பட்ட ‍ரேஷன்கடை விற்பனையாளர்கள் கடையை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
12-ஏப்-202114:43:54 IST Report Abuse
MURUGESAN நேர்மையானவங்களுக்கு ஒட்டு போடுங்கன்னு சொன்னா யாரு கேட்டீங்க. ஊழல் கட்சிகளுக்கு ஒட்டு போட்டுட்டு வந்தீங்க இல்ல. இனிமே யாராவது வாய திறந்தீங்க அவ்வளவுதான். எத்தனை வாட்டி பட்டாலும் உங்களுக்கு எல்லாம் புத்தி வராது. போங்க போங்க இன்னும் யாராச்சும் ஓசியில அது தாரேன் இது தாரேன் அப்படின்னு சொல்லுவான் அங்கயும் போயி கியூவுல நில்லுங்க.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஏப்-202122:53:18 IST Report Abuse
தமிழவேல் நல்லாவே ஏமாத்தி ஒட்டு வாங்கிக்கிட்டானுவோ... 😂
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-ஏப்-202115:18:00 IST Report Abuse
சீனி தேர்தல் ரிசல்டு வர்ரதுக்குள்ள முந்தின கூட்டமா இருக்கும்.... :)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X