ராமர் பாலம் வழக்கு: 26 முதல் விசாரணை

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி :'ராமர் சேது பாலத்தை, தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்க கோரிய மனு, வரும் 26ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா - இலங்கை இடையே, கடல் வழி வர்த்தகம், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், வங்கக் கடலில், சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த, காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
ராமர், பாலம்,26 முதல் விசாரணை

புதுடில்லி :'ராமர் சேது பாலத்தை, தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்க கோரிய மனு, வரும் 26ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா - இலங்கை இடையே, கடல் வழி வர்த்தகம், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், வங்கக் கடலில், சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த, காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டது.


latest tamil news
கடும் எதிர்ப்பு


வல்லுனர்களால் முன்மொழியப்பட்ட வழித் தடத்தில், கடலுக்கு அடியில், ஹிந்துக்களால் புனிதமானதாக கருதப்படும், ராமர் பாலம் இருப்பதால், இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.பா.ஜ., - எம்.பி.,யும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி, 2007ல், இந்த திட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

'ராமர் பாலத்தை இடித்தோ, அதற்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ, எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது' என, வாதிட்டார்.மேலும், ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்தார்.இம்மனு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை அடுத்து, இதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தை
நாடினார்.

மூன்று மாதங்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகும்படி, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன் பின், கொரோனா தொற்று பரவல் காரணமாக, நீதிமன்ற நடவடிக்கைகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தன. இந்நிலையில், தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமை யிலான அமர்வு முன், இந்த மனு நேற்றுவிசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, சுப்பிரமணியன் சாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


அவகாசம்இதையடுத்து, தலைமை நீதிபதி பாப்டே உத்தரவிட்டதாவது: இந்த மனுவை விசாரிக்க, அதிக அவகாசம் தேவைப்படுகிறது.நான், வரும் 23ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால், அவ்வளவு கால அவகாசம் என்னிடம் இல்லை.எனவே, புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள, என்.வி.ரமணா, 26 முதல், இந்த மனுவை விசாரிப்பார்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - South Carolina. Columbia,யூ.எஸ்.ஏ
09-ஏப்-202113:38:41 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     மாருதி உங்க பேரை வெச்சி அசிங்க படுத்தும் கூட்டத்தை காலி செயுங்கள், மதம் வழிபாடு எல்லாம் கோயில் இல் இருக்கனும் கண்ட இடத்தில் இருந்து என்ன பயன்
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
09-ஏப்-202114:49:40 IST Report Abuse
Dr. Suriyaஅதே தான் நாங்களும் சொல்றோம்...
Rate this:
Anand - chennai,இந்தியா
09-ஏப்-202117:00:13 IST Report Abuse
Anandமதம்மாறி போலியான ஹிந்து பெயரில் என்னமா ஊளையிடுது..... பந்திக்கே வேண்டான்னாலும்.....
Rate this:
Cancel
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
09-ஏப்-202113:05:46 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு ஜட்ஜ் அய்யா ஏண் நாட்டில் koraanaa என்று தலைவிருது ஆடுது இப்போ இது எல்லாம் தேவையா என்று கேளுங்கள் இந்த மூடர் கூட்டம் திசை திருப்பும் வேளையில் தான் இருப்பார்கள் , இவங்களுக்கு ராமர் பீமர், வேல் விநாயகர் என்று கதை விட்டு இதுவும் கடந்து போகட்டும் என்று இருக்கும் திருட்டு கூட்டம் தன இந்த சிங்கி பசங்கள்
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
09-ஏப்-202114:52:23 IST Report Abuse
Dr. Suriyaஎப்படி டெல்லியில சாகன் பாக் ல நடந்த கூட்டத்தை போல ஜட்ஜ் அய்யா உத்தரவு தவறு தவறு பேச்சு வார்த்தைக்கு குழு போட்டது போல போடணுமுன்னு சொல்லுங்க.....
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
09-ஏப்-202112:57:36 IST Report Abuse
Ramalingam Shanmugam தாஜ் மஹாலை மீட்டெடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X