சென்னை:வளிமண்டல சுழற்சியால் இன்று முதல் 12ம் தேதி வரை தென்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இலங்கை மற்றும் அதையொட்டிய கடற்பகுதியில் 1.5 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்று முதல் ௧௨ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE