வளிமண்டல சுழற்சியால் தென் மாவட்டங்களுக்கு மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளிமண்டல சுழற்சியால் தென் மாவட்டங்களுக்கு மழை

Added : ஏப் 09, 2021
Share
சென்னை:வளிமண்டல சுழற்சியால் இன்று முதல் 12ம் தேதி வரை தென்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இலங்கை மற்றும் அதையொட்டிய கடற்பகுதியில் 1.5 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்று முதல் ௧௨ம் தேதி வரை லேசான மழைக்கு

சென்னை:வளிமண்டல சுழற்சியால் இன்று முதல் 12ம் தேதி வரை தென்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இலங்கை மற்றும் அதையொட்டிய கடற்பகுதியில் 1.5 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்று முதல் ௧௨ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X