பாப்டே தலைமையிலான 'கொலீஜியம்' கூடி விவாதம்

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட 'கொலீஜியம்' கூட்டம், நேற்று நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக, ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடி விவாதித்து, நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைப்பது வழக்கம். ஓய்வுஇந்த
பாப்டே ,'கொலீஜியம்' , விவாதம்

புதுடில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட 'கொலீஜியம்' கூட்டம், நேற்று நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக, ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடி விவாதித்து, நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைப்பது வழக்கம்.


ஓய்வு



இந்த கொலீஜியத்துக்கு, தலைமை நீதிபதி, பாப்டே தலைமை வகிக்கிறார். நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.எப்.நாரிமன், யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் கொலீஜியத்தில் இடம் பெற்றுள்ளனர்.கடந்த, 2019, நவம்பரில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற, பாப்டே வரும், 23ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். பாப்டே பரிந்துரையின்படி, புதிய தலைமை நீதிபதியாகரமணாவை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் உத்தரவிட்டார்.உச்ச நீதிமன்றத்தில் மொத்தம், 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நீதிபதி இந்து மல்கோத்ரா ஓய்வு பெற்றதை அடுத்து, ஐந்து நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ளன.


latest tamil news



ஒருமித்த கருத்து



இந்நிலையில், புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, கடந்த மாதம் நடந்த கொலீஜியம் கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.இதையடுத்து, பாப்டே தலைமையிலான கொலீஜியம் கூட்டத்துக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று கூட்டம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
09-ஏப்-202110:27:33 IST Report Abuse
sankaseshan நீதிபதிகளை பாகுபாடு செய்து பிரித்தது காங்கிரஸ் இதுக்கு மூல காரணம் இந்திரா தெரியுமா மணி.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
09-ஏப்-202110:22:57 IST Report Abuse
Appan இந்தியாவில் நீதி துறை சுதந்திரமாக செயல் பட இது தேவை..இந்திராகாந்தி எமெர்ஜெண்சி அறிவித்த பொது நீதி துறை அரசின் கட்டு பாட்டில் இருந்தது..அதனால் அப்போ இருந்த தலைமை நீதிபதி ஒன்னும் செய்ய முடியவில்லை..இந்த கொலிஜியத்திலும் சில குறைபாடுகள் இருக்கலாம்..ஆனா முதல் மாதிரி அரசு கட்டு பாட்டில் வந்தால் நெட்டை எதிர்பார்க்காத வரையில் அரசு செயல் படும்..அதனால் இந்த முறையே சிறந்தது..
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
09-ஏப்-202107:07:16 IST Report Abuse
Darmavan கொலீஜியும் முறை தவறானது..வெளிப்படைத்தன்மை இல்லை. சீனியர்கள் புறக்கணிப்பு.மத்திய அரசு இதை செய்ய வேண்டும்.முன்பு இருந்த படி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X