விமானத்தில் நிர்வாணமாக நின்ற பயணி

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'ஏர் ஏசியா' விமானத்தில் நிர்வாணமாக நின்று விமான குழுவினரிடம் முத்தம் கேட்ட ஆண் பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.சமீபத்தில் ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணியர் விமானம் டில்லியில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு புறப்பட்டது.அதிலிருந்த ஒரு ஆண் பயணி தன் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றுள்ளார். மேலும் விமான குழுவை சேர்ந்த பெண்

புதுடில்லி:'ஏர் ஏசியா' விமானத்தில் நிர்வாணமாக நின்று விமான குழுவினரிடம் முத்தம் கேட்ட ஆண் பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணியர் விமானம் டில்லியில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு புறப்பட்டது.அதிலிருந்த ஒரு ஆண் பயணி தன் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றுள்ளார். மேலும் விமான குழுவை சேர்ந்த பெண் ஊழியர்களிடம் சென்று முத்தம் கேட்டுள்ளார். இதனால் விமானத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர் போதை பொருள் பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விமான குழுவினர் அவரை சோதனை செய்தனர்.

பின் அந்த நபர் விமான குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு உடைகளை அணிந்து இருக்கையில் அமர்ந்தார்.பெங்களூரில் விமானம் தரையிறங்கியதும் அந்த நபர் மீண்டும் தன் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார்.அதிகாரிகள் அறிவுறுத்தியை தொடர்ந்து அந்த நபர் தன் உடைகளை மீண்டும் அணிந்தார்.இதையடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடுத்த 30 நாட்களுக்கு விமானத்தில் பயணிக்க அவருக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202100:01:25 IST Report Abuse
naadodi Role of drugs
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
09-ஏப்-202108:42:15 IST Report Abuse
Srinivasan Rangarajan Exibhitionist
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X