பொது செய்தி

தமிழ்நாடு

பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை; சில்லரை வியாபார கடைகளுக்கு தடை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மதுரை : கொரோனா பரவலை தடுக்க மதுரை பரவை மற்றும் மாட்டுத்தாவணி மொத்த காய்கறி சந்தை வளாகத்திலுள்ள சில்லரை வியாபார கடைகளுக்கு நாளை (ஏப்., 10) முதல் தடை விதிக்கப்படுகிறது.கலெக்டர் அன்பழகன் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்றை தடுக்க மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து

மதுரை : கொரோனா பரவலை தடுக்க மதுரை பரவை மற்றும் மாட்டுத்தாவணி மொத்த காய்கறி சந்தை வளாகத்திலுள்ள சில்லரை வியாபார கடைகளுக்கு நாளை (ஏப்., 10) முதல் தடை விதிக்கப்படுகிறது.

கலெக்டர் அன்பழகன் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்றை தடுக்க மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகள், நிறுவனங்களில் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அணியாதவர்களை அனுமதிக்க கூடாது. நகர் டவுன் பஸ்களில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும். நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்க கூடாது. வாடகை மற்றும் டாக்ஸிகளில் டிரைவர் தவிர்த்து மூன்று, ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டு பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

பொதுமக்கள் காய்ச்சல், இருமல், சளி, மூச்சிறைப்பு ஆகியவை தென்படும்பட்சத்தில் அருகிலுள்ள மாநகராட்சி காய்ச்சல் முகாம்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், ஊரக ஆரம்ப சுகாதாரநிலையங்கள் நடத்தும் காய்ச்சல் முகாம்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். டாக்டர்கள் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் இனி விதிக்கப்படும், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X