அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குங்கள் தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சென்னை:'பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முககவசம் சானிடைசர் வழங்குங்கள்; மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர ஒன்றிணைவோம் வா' என தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தேர்தல் நேரம் மட்டுமின்றி எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் கட்சி தி.மு.க. தான். கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவும் வகையில் 'ஒன்றிணைவோம் வா'

சென்னை:'பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முககவசம் சானிடைசர் வழங்குங்கள்; மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர ஒன்றிணைவோம் வா' என தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:

தேர்தல் நேரம் மட்டுமின்றி எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் கட்சி தி.மு.க. தான். கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவும் வகையில் 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல்பாட்டை தி.மு.க. துவக்கியது. கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கான உணவு மருத்துவ உதவி அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தந்தோம். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் தொண்டாற்றினர்.

இந்த கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைத்திடுங்கள். கொரோனா இரண்டாவது அலை குறித்து டாக்டர்களும் மக்கள் நல்வாழ்வு துறையும் எச்சரித்திருப்பதால் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குகள். வாய்ப்புள்ள இடங்களில் முககவசம் சானிடைசர் வழங்குங்கள். தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட 'ஒன்றிணைவோம் வா'ருங்கள்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X