பொது செய்தி

தமிழ்நாடு

தன்னை அறிந்திராத ஒருவன் எதை அறிந்திருந்தும் பயனில்லை: எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேச்சு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மதுரை : ''தன்னை அறிந்திராத ஒருவன் எதை அறிந்திருந்தும் பயனில்லை'' என மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேசினார்.'சித்த ஜாலம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஆன்மிக வழிமுறைகளில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என்ற பிரிவுகளில் சித்தர்கள் தனித்து நிற்பவர்கள். தங்களுக்குள் தங்களை

மதுரை : ''தன்னை அறிந்திராத ஒருவன் எதை அறிந்திருந்தும் பயனில்லை'' என மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேசினார்.

'சித்த ஜாலம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஆன்மிக வழிமுறைகளில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என்ற பிரிவுகளில் சித்தர்கள் தனித்து நிற்பவர்கள். தங்களுக்குள் தங்களை தேடி கண்டறிந்தவர்கள் என்றும் அவர்களை கூறலாம். 'தன்னை அறிய தனிக்கொரு கேடில்லை,' என, திருமூலர் கூறியிருக்கிறார்.

சித்தர்கள் தங்களை அறிந்த காரணத்தால் தங்கள் உடலையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் இருக்க அவர்களால் இயலும். அதே போல பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்தவும் அவர்களால் முடியும். பிறர் மனதில் இருப்பதை உணரும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.

சித்தர்களில் போகர் தனிச்சிறப்பு பெற்றவர். இவரால் தான் பழநி மலையும், முருகப்பெருமானும் நமக்கு கிடைத்தனர். தமிழகத்தில் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் சாதனைகள் தான் சித்த ஜாலம் என சிந்திக்கப்படுகிறது, என்றார். ஏற்பாடுகளை நிறுவனர் நெல்லைபாலு செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X